பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் சிறுவன் ஒருவன் செல்ஃபி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் பிரதமர் மோடி 7 நாட்கள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி.நிகழ்ச்சியின் துவக்கமாக, பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட நடனங்களுடன் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினர்.
பின்பு நகிழ்ச்சியின் இடையில் மோடியும், டிரம்பும் தீவிரமாக பேசிக்கொண்டு நடந்து வருகையில்,நடனமாடிய சிறுவர்கள் ஓரமாக நிற்கின்றனர்.அப்போது ஒரு சிறுவன் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என கேட்கிறார். உடனே மோடி, டிரம்ப் இருவருமே ஒரு தயக்கமும் இல்லாமல் அந்த சிறுவனை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.புகைப்படம் எடுத்த பின்பு மோடி அச்சிறுவனின் முதுகில் செல்லமாக தட்டுகிறார்.இவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இரு பெருந்தலைவர்களுடன் ஒரே நேரத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் தருணம் மிகவும் அற்புதமானது என கூறி அந்த சிறுவனை lucky boy என அழைத்து வருகின்றனர்.
Memorable moments from #HowdyModi when PM @narendramodi and @POTUS interacted with a group of youngsters. pic.twitter.com/8FFIqCDt41
— PMO India (@PMOIndia) September 23, 2019
Discussion about this post