கடவுள் நம்பிக்கையே இல்லை என பொய்யான கொள்கையுடன் நாடகமாடும் திமுகவின் குட்டு, மீண்டும் ஒரு முறை உடைந்திருக்கிறது.
புதுச்சேரி மாவட்டம் திருப்பட்டினம் திமுக சட்டமன்ற உறுப்பினரான கீதா ஆனந்தன், கட்சி கொள்கைகளை மறந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தார். சாமியார்களிடம் ஆசிர்வாதம் பெறுவதை வழக்கமாக வைத்து வந்த அவர், இன்று திமுக ஒரு போலி கொள்கை கூட்டம் என்பதை அப்பட்டமாக நிரூபித்து காட்டியுள்ளார். ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது தலையில் கஞ்சி கலையம் சுமந்து வழிபாடு நடத்தியுள்ளார். இச்சம்பவம் மற்ற திமுக தொண்டர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தினாலும், திமுகவின் உண்மையான நாத்திகத் தன்மையை வெளிக்கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
Discussion about this post