கோ-ஆப்டெக்ஸில் விற்கப்படும் கைத்தறி துணிகளில், இந்த ஆண்டு முதல் நெசவாளர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறுகின்றன.
கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது. தீபாவளி விற்பனைக்காக காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், பருத்தி சேலைகள் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப் பட்டுள்ளது. நாகையில் தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தீபாவளியை ஒட்டி இலக்கு விற்பனை 325 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த வருடம் முதல் கைத்தறி துணிகளில், நெசவாளர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Discussion about this post