திருப்பூரில் வெண்ணெய் இல்லாமல் போலியாக தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் நெய் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் சாலை, RVE லேஅவுட் போன்ற பகுதிகளில் உள்ள 7 வீடுகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிசை தொழில் போன்று வீடுகளில் போலியாக நெய் தயாரிக்கப்பட்டு வந்ததது தெரியவந்தது.
செயற்கை முறையில் பாமாயில் மற்றும் டால்டா போன்றவற்றை சேர்ந்து போலியான நெய்யை காய்ச்சி கிராம பகுதிகளில் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்ததை கண்டறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செயற்கை நெய் தயாரித்தது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி நெய் மாதிரிகள் உணவு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Discussion about this post