திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக விழாவில் விதிமுறைகளை மீறி அலங்கார வளைவுகள், கொடி கம்பம், தோரணங்கள் அமைத்திருந்தது அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேச்சை அக்கட்சியின் நிர்வாகிகள் ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் விழா மற்றும் அக்கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதற்காக அக்கட்சியினர் அங்குள்ள ஆண்கள் அரசு மேல் நிலைபள்ளி எதிரில் உள்ள மைதானங்களில் பொதுக்கூட்ட மேடை அமைத்திருந்தனர். இதில் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலைகளில் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள் அமைத்திருந்தனர்.
கட்சி விழாக்களில் தோரணங்கள், அலங்கார வளைவுகள் எதையும் வைக்கக்கூடாது என அண்மையில் தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அக்கட்சியின் நிர்வாகிகள் அதனை ஏற்க மறுத்து சாலைகளில் கொடிகள், அலங்கார வளைவுகள் அமைத்ததால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்களின் நலன் மீது அக்கறை உள்ளதாக கூறிக்கொண்டு, இவ்வாறு செய்வது திமுகவின் உண்மை முகத்தை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், தலைவரின் பேச்சை தொண்டர்கள் ஏற்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Discussion about this post