பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பாஜகவினர் சேவை வாரம் கடைப்பிடித்துவரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எம்பிக்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 69ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. நாட்டுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மோடியின் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சேவை வாரமாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி சேவை வாரத்தின் தொடக்க நாளான இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவுதம் கம்பீர், மனோஜ் திவாரி ஆகியோர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்குச் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் பழங்கள் வழங்கியதுடன் விரைவில் நலம்பெற வாழ்த்துத் தெரிவித்தனர். அதன்பின் மருத்துவமனை வளாகத்தில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர்.
Discussion about this post