வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான் பேட்டையை சேர்ந்த ஜெய் லாப்தீன் என்பவர் கடந்த 6 ஆம் தேதி முதல் காணவில்லை என கூறப்படுகிறது. மறுநாள் குடிமராமத்து பணிகளுக்காக ஆவதம் ஏரியில் பள்ளம் தோண்டியபோது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். இதில் முன்விரோதம் காரணமாக ஜெய் லாப்தீனை, பாலி, அன்பரசு, சூரியமூர்த்தி, அஜித் ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
—-
Discussion about this post