லண்டன், அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர், அமெரிக்கா, லண்டன், துபாய் ஆகிய மூன்று நாடுகளின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தன் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மொத்த 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் சான் ஹுசெ முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு 2 ஆயிரத்து 305 கோடி ரூபாய் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் 19 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் கையேழுத்தாகியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டம் நடைப்படுத்தபடும் பொழுது 6 அயிரத்து 560 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
இதேபோல் அமெரிக்காவின் பஃபலோ நகரில் உள்ள கால்நடை பண்ணை போன்று சேலம் மாவட்டத்தில் பிரம்மாண்ட கால்நடை பூங்கா அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த பூங்காவில் அமெரிக்காவில் கேட்டறியப்பட்ட அனைத்து தொழில்நுட்பமும் செயல்படுத்தபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ பணியாளர்களின் பணித் திறனை மேம்படுத்திடவும், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாகவும், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post