கடலில் மாயமான தனுஷ்கோடியை சேர்ந்த 4 மீனவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்த உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 29 ஆம் தேதி தனுஷ்கோடி அடுத்த நடராஜபுரத்தை சேர்ந்த 10 பேர் புதிய படகு வாங்குவதற்காக கடல் வழியாக கடலூர் சென்றுள்ளனர். மல்லிப்பட்டிணம் வழியாக சென்ற போது, திடீரென கடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக படகு நடுக்கடலில் சாய்ந்ததில், படகில் இருந்த 10 பேரும் கடலில் முழ்கினர். இதில் ஆறு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 4 மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post