பொள்ளாச்சியில் நீரா பானத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் புதிய பாட்டிலிங் ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். தேங்காயின் விலை நிரந்தரமாக இல்லாததால், அதற்கு மாற்று ஏற்பாடாக விவசாயிகள் நீரா பானம் இறக்க அரசிடம் அனுமதி கோரி இருந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுத் தமிழக அரசு அதற்கு அனுமதி அளித்த நிலையில், நீராபானத்தை உலகளவில் ஏற்றுமதி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டது. அதன்படி நீரா பானத்தை பாட்டில்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பாட்டிலிங் ஆலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் துணை சபாநாயகர் ஜெயராமன், அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post