கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏரி, குளங்களை குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
மண்மங்கலம், தண்ணிர் பந்தல் பாளையம், வாங்கல் குப்பிச்சி பாளையம், சீத்த காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரும் பணிகளை பூமி பூஜையுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.
இந்த பணிகள் மூலம் சுமார் ஆயிரத்து 467 ஹெக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதிகள் பெறவுள்ளன. மழைக்காலங்களுக்கு முன்பே நீர்வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படுவதால் கடைமடை வரை மழைநீர் சென்று சேரும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
மாவட்டத்தில், நான்கு பணிகள் 3 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Discussion about this post