சந்திரயான் 2 விண்கலத்திருந்து விக்ரம் லேண்டர் இன்று வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.
சந்திரயான் 2 விண்கலம் நிலவை நெருங்கியுள்ள நிலையில் ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் விக்ரமை பிரிக்கும் பணி தொடங்கி உள்ளது. கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக நெருங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20ம் நாள் பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தின் உயரம் 5 முறை மாற்றியமைக்கப்பட்டு நிலவின் மிக அருகில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கிய நிகழ்வாக, சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரமை பிரிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து நிலவை வலம் வரும் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்கிறது.
Discussion about this post