இன்று பிக்பாஸ் வீட்டில் 70வது நாள்.பிக்பாஸ் வீட்டில் நேற்று கமல்ஹாசன் அனைவரிடமும் ஒரு பொம்மை கொடுத்து வீட்டில் உள்ள போட்டியாளரிடம் நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லுங்கள் என கூறினார்.போட்டியாளர்களும் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டனர்.மேலும், நேற்று பிக்பாஸ் வீட்டில் யாரும் காப்பாற்ற படவில்லை.எனவே இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் பார்வையாளர் ஒருவர் லாஸ்லியாவிடம் கேள்வி கேட்கிறார்.’நீங்க சேரன் மேல பாசம் வச்சி இருக்கத, கவின் drama -னு சொல்லுறப்ப உங்களுக்கு கோவம் வரலையா என கேட்க, லாஸ்லியாவோ எனக்கு எது உண்மை,எது பொய் அப்படினு தெரியல என கூறி மழுப்புகிறார்.இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியா குறித்த சேரனின் ஆதங்கத்தை தர்ஷனிடம் கூறுகிறார்.எப்ப நீ கவினோட உடகார்ந்து பேச ஆரம்பிச்சியோ ,அதுலேந்து சுத்தமா விலகிடுச்சு,தவறான influence- ல பேசிருச்சு என லாஸ்லியா பற்றி கூறுகிறார். கவினால் லாஸ்லியா, சேரனுக்கு இடையே உள்ள அப்பா-மகள் உறவில் விரிசல் விழுந்துவிடுமா என்பதை பொருத்து இருந்தே பார்க்க வேண்டும்.
Discussion about this post