புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது பொதுப்பணித்துறை பணியில் சேர்க்கப்பட்ட 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை காங்கிரஸ் அரசு பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஏராளமான ஊழியர்கள், சுப்பையா சதுக்கம் அருகே அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.
Discussion about this post