நீலகிரி அருகே, அரசுப் பள்ளியில், மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்கின்ற வகையில், சத்து பால் வழங்கும் திட்டத்தை, மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தூனேரி அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் சத்து பால் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இத்திட்டம் மூலம் முதற் கட்டமாக 4 பள்ளிகளைச் சார்ந்த ஆயிரத்து 200 மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களில் வைட்டமின் ஏ மற்றும் டி சத்து அடங்கிய 200 மில்லி பால் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
நீலகிரி மலை மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் சமுதாய பொறுப்புணர்வு உள்ள திட்டங்களை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மதுபான பார்கள் அரசு பள்ளிகளை தத்து எடுத்து மாணவ, மாணவிகளுக்கு தேவையான சீரூடைகள், மற்றும் மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளை வழங்கி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post