தஞ்சை அருகேயுள்ள பூதலூரில் தாய்க்குக் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருபவருக்குப் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை அடுத்துள்ள நாச்சியார்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சிறு வயதிலேயே அவருடைய தந்தையை இழந்துவிட்டார். இந்த நிலையில், அவரது தாயார் சாரதா மிகவும் சிரமப்பட்டு சத்தியமூர்த்தியைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு சத்தியமூர்த்தியின் தாயாரும் இறந்து விட்டார். அவர் வாழ்ந்த இடத்தின் அருகே உள்ள 5 ஏக்கர் நிலத்தை அவர் படித்த கல்லூரிக்குக் கட்டடம் கட்ட இலவசமாகக் கொடுத்துள்ளார். இதனையடுத்து அதன் அருகில் கடந்த 2010ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் செலவில் அவர் தனது தாய்க்கு சிலை வைத்து கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்தினார். அப்போது முதல் அவர் நாள்தோறும் தனது தாய்க்குப் பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார். இதனை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post