சென்னை வில்லிவாக்கத்தில் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதி நகரைச் சேர்ந்த மேரி என்பவர் 10ஆம் வகுப்பு படித்த வந்த தனது மகளை காணவில்லை என கடந்த 10நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் மேரியின் மகள் வில்லிவாக்கத்தில் பணிபுரிந்து வந்த துணி கடையில் உடன் பணிப்புரிந்த முருகன் என்பவரை காதலித்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரியில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரியில் சிறுமியை மீட்ட காவல்துறையினர், முருகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Discussion about this post