நெல்லை மாவட்டம் காருகுறிச்சியைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பல விதங்களில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காருகுறிச்சி கூட்டுறவு மண்பாண்ட தொழில், தமிழகத்தில் புகழ் பெற்றதாகும். இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பெருட்கள் முக்கியத்துவம் பெற்று சிறந்து விளங்குகிறது. தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பல விதங்களில் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவப் பருவத்திலே இந்த தொழில் நுட்பத்தைக் கற்று கொடுக்க, அரசு முன்வர வேண்டும் என இந்த தொழில் கலைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். பாரம்பரியம், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இந்த தொழிலை காப்பற்ற, அரசு முன் வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post