பனை, தென்னை மரங்களில் கூடுகட்டி வாழும் தூக்கணாங்குருவி பறவை இனத்தை மணப்பாறை அருகே உள்ள விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொன்னக்கோன்பட்டி, கலிங்கப்பட்டி போன்ற கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளி மற்றும் காடுகளில் அதிகளவு தூக்கணாங் குருவிகள் காணப்படுகின்றன. இந்த தூக்கணாங்குருவிகள் ஊர்க்குருவி வம்சத்தை சேர்ந்த ஒரு பறவைகளாகும். இத்தகைய சிறப்புமிக்க அரியவகை தூக்கணாங்குருவிகள் பெருமளவு குறைந்து விட்டாலும், இப்பகுதியில் பல ஆண்டுகளாக வாழும் தூக்கணாங்குருவிகளை விவசாயிகள் அரவணைப்போடு பாதுகாத்து வருகின்றனர்.
Discussion about this post