தமிழக அரசின் வழிகாட்டுதல்படி வெட்டி வேர் சாகுபடியில் ஆர்வம்காட்டி வரும் விவசாயிகள், தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதிகளான நொச்சிகாடு, ராசாபேட்டை, பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, வெட்டி வேர் சாகுபடி நடைபெற்று வருகிறது. வெட்டி வேர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்காட்டி தற்போது அறுவடை செய்து வருகின்றனர். வெட்டி வேரை மூலப்பொருளாக வைத்து, அழகு சாதனப் பொருட்கள், பற்பொடி, தண்ணீர் சுத்திகரிப்பு, பூஜை நறுமணப் பொருட்கள், மருத்துவத் தைலம், கைவினைப் பொருட்கள் போன்ற 50க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசு வழிகாட்டுதல்படி தாங்கள் வெட்டி வேர் விவசாயம் செய்வதால் நல்ல லாபத்தை ஈட்டமுடிவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Discussion about this post