திருப்பூர் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் புகையிலைப் பொருட்களைக் கடத்திவந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் – மங்கலம் சாலையிலுள்ள சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக திமுக கட்சிக் கொடியுடன் வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தனர். காரின் பின்பக்க இருக்கையின் கீழ் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 50 கிலோவும், 35க்கும் மேற்பட்ட வெளி மாநில மதுபான பாட்டில்களும் இருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, காரில் இருந்த சதீஷ்குமார், ஞானப்பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்பேசிகள், கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
Discussion about this post