மதிமுக பொது செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளதால், வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, மதிமுகவை உடைக்க கருணாநிதி முயற்சி செய்வதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதோடு, கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, வைகோ மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், குற்றச்சாட்டு பதிவு மற்றும் சாட்சிகள் விசாரணை என அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்பதால் வைகோவின் எம்.பி. பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post