சென்னையில் கழிவு நீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது…
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனைச் சேர்ந்த முக்கிய நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகள் அமைத்தல், புனரமைத்தல் போன்ற பணிகளுக்காக 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்து வலுப்படுத்துதல், போன்ற பணிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post