திண்டுக்கல்லில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 2 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள நொச்சி ஓடைப்பட்டியில், காகிதகூழ், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த ஆண்டு புதுவரவாக பாலகணபதி, அரங்கநாதர், அத்தி வரதர், கற்பகவிநாயகர், சிம்ம மற்றும் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், முத்து மற்றும் ரத்தினக் கல் பதிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
Discussion about this post