பொள்ளாச்சியை அடுத்த கவுண்டன்புத்தூர் கிராமத்தில் குடும்பத் தகராறில் ஒரு வயது மகளுக்கு தீ வைத்து தாயும் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கவுண்டன்புதூர் கிராமத்தில் சதிஷ், மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சதீஷ் தினமும் மது அருந்தி விட்டு வருவதால், குடும்பத்தில் தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த மாலதி ஒரு வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தானும் தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
Discussion about this post