சென்னையில் இரவு முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்று சங்கமத்தின் காரணமாக இன்றும் நாளையும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
Discussion about this post