காஷ்மீர் விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான விவகாரத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ஆம் தேதி போராட்டம் மற்றும் ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டது. இந்நிலையில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட உள்ள இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும், என்று உதவி ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நடைபெற்றால் வன்முறை மற்றும் பிரிவினை உண்டாகி நாட்டின் அமைதிக்கு கலங்கம் ஏற்படும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post