பெரம்பலூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால், வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக பெய்து வருகிறது. நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் 3 அடி உயரத்திற்கு மழைநீர் பெருக்கெடுத்தது. இதனிடையே சாலையோர வடிகால் வாய்க்கால்களில், நீரில் வந்த குப்பைகள் தேங்கி அடைத்து கொண்டதால், சிலோன் காலணி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் வெள்ள நீரை உடனடியாக வெளியேற்றினர்.
Discussion about this post