காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவின் மைசூர், மாண்டியா, சாமராஜநகர் மாவட்டங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுக்கு நேற்றுக் காலை வினாடிக்கு 27ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 12ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post