சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பழைய கற்காலம் தொட்டு பெருங் கற்காலம் வரையிலான வரலாற்று ஆய்வு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.
மேட்டூர் அடுத்த மாதையன் குட்டையில் தனியார் பள்ளியில், விழுப்புரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வீரராகவன், பழைய கற்காலம் தொட்டு பெருங்கற்காலம் வரையிலான வரலாற்று ஆய்வு தொடர்பான கண்காட்சி நடத்தினார். இந்த கண்காட்சியில் கல்மரம், கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள், மண் பாண்டங்கள், உலோகங்கள், ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பல்லவர்கால நடுகற்கள், மடை கல்வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை மேட்டூர் சுற்றுவட்டார பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் வந்து பழங்கால பொருட்களை ரசித்து பார்த்து சென்றனர்.
Discussion about this post