திமுகவில் அழகிரியைப் போல கனிமொழியையும் ஒதுக்கிவைக்க வாய்ப்பு உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் இசை நீருற்றை தொடங்கி வைத்தார். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வண்ண விளக்குகளுடன் கூடிய இந்த இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோருடன் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக ஸ்டாலினுடைய குடும்ப கட்சியாகவே மாறியுள்ளதாகவும், அழகிரியை போல கனிமொழியையும் ஒதுக்கிவைக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். மக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக மாவட்டங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post