சென்னைக்கு இதுவரை ரெயிலில் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி 50 வேகன்கள் கொண்ட சிறப்பு ரெயிலில், 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு கூடுதலாக மற்றொரு ரெயில் இயக்கப்பட்டு, மேலும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்பப்பட்டது. அதன்படி 2 ரெயில்களில் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் ஒரு ரெயில் வரவழைக்கபட்டு, இந்த வாரம் 3-வது ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுவரை ரெயிலின் மூலம் 142.5 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post