வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளதற்கு அந்த மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நிர்வாக காரணங்களுக்காக வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து வேலூர் மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் நன்மையடைவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மாவட்டத்தை பிரித்ததற்கு முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post