பரோலில் வெளிவந்துள்ள நளினி வேலூர் மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சந்தித்தார்.
முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினி அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 30 நாள் பரோலில் வெளியே வந்துள்ளார். சத்துவாச்சாரியில் தங்கியுள்ள அவர் இன்று வேலூர் மத்திய சிறையில் இருக்கும் தனது கணவர் முருகனை சந்தித்தார்.
ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பில் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார். இந்த சந்திப்பிற்காக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பிறகு சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், சந்திப்பிற்கு பிறகு காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Discussion about this post