பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி தேர்தலின்போது அளித்த வாக்குருதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்த ராகுல்காந்தி, இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் சரமாரியாக அதிகரிக்கிறது என கூறியுள்ளார். இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post