கடலூர் மாவட்டம் கொத்தட்டை துணை நிலையத்தின் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துணை மின்நிலையத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தை முன்னிட்டு மின்தடை மற்றும் மின்னழுத்த ஏற்றத்தாழ்வு ஆகிய குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக தலா 52 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஊர்ப்புறங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கத் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு இப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post