ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்த கவிதாமணி என்பவருக்கு, ஏற்கனவே திருமணமான நிலையில், ஜெயக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் சென்னை கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கவிதாமணியை காணவில்லை என உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், கவிதாமணி வேறு ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்து இருப்பதாக கூறியுள்ளார். அங்கு வந்த காவல்துறையினர், இருவரையும் சொந்த ஊர் அழைத்து செல்வதற்காக வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
அப்போது இருவரும் வாகனத்திற்குள் மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இருவரும் ஏற்கெனவே விஷம் அருந்தி இருப்பது தெரிய வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
Discussion about this post