ஜெஃப்ரி என்ற அமெரிக்க கோடீஸ்வரர் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக நடத்திய வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், சிறையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன் ஒரு அமெரிக்க நிதியாளர் மற்றும் கோடீஸ்வரர். 2008 இல் புளோரிடா மாநில நீதிமன்றத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஜெஃப்ரி 13 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். மீண்டும் சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் இந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிறை அறையில் கயிற்றால்
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
எப்ஸ்டீனின் சடலத்தைச் சிறை அதிகாரிகள் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். கோடீஸ்வரரான இவருக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மற்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல பேர் நண்பர்களாக இருந்தனர். மேலும் ஜெஃப்ரி 100 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. கைது செய்ப்பட்டோம் என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜெஃப்ரி கடந்த மாதத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
Discussion about this post