கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், எலிக்காய்ச்சல் கால்நடைகளுக்கு பரவுவதைத் தடுக்க கேரளாவுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கேரளாவிலிருந்து தமிழகத்திறகுக எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக குறிப்பிட்ட அவர், இதற்காக தமிழக கேரள எல்லைப்பகுதியில் கால்நடை மருத்துவக்குழு மூலம் சோதனைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். தமிழக கேரள எல்லையில் கால்நடைகள் வைத்திருப்போர் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், தமிழகத்திற்கு வரும் கால்நடைகள் அனைத்தும் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
Discussion about this post