காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் 41 ஆவது நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், கடந்த 40 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதுவரை 75லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். 41ஆம் நாளான இன்று, அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விடுமுறை நாளான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 3 கிலோ மீட்டர் தூரம் வரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
Discussion about this post