மேன் வெசஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அதில் இருந்து சில காட்சிகள் வெளியாகியுள்ளன..
டிஸ்கவரி தொலைக்காட்சியின் கிரில்சுடன் , நமது பிரதமர் இணைந்து அஸ்ஸாம் மலைப்பகுதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி அத்தொலைக்காட்சியில் வரும் 12 ந்தேதி ஒளிபரப்பாகிறது.. இந்திய வனம் மற்றும் வன விலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டார்.. ஏற்கனவே நிகழ்ச்சியின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் தற்போது மேலும் பல காட்சிகள் வெளியாகி இருக்கிறது.. அதில், ஏதேனும் புலி தாக்க வந்தால், தற்காப்புக்காக வைத்துக்கொள்ளுங்கள் என ஒரு ஈட்டியை பிரதமரிடம் தருகிறார் கிரில்ஸ்.. ஆனால் தமது வளர்ப்பு முறை, எந்த உயிரையும் கொல்ல அனுமதிக்காது என கூறுகிறார் பிரதமர்..இந்தியாவை தூய்மையாக்க என்னென்ன தேவைப்படுகிறது என கிரில்ஸ் கேட்க, எங்கள் நாட்டை நாங்கள் தான் தூய்மை படுத்த வேண்டும், வெளியில் இருந்து யாரும் வந்து தூய்மைபடுத்த முடியாது என பிரதமர் கூறுகிறார். இயற்கைக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தால், இயற்கை நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் எனவும் பிரதமர் கூறுகிறார்..
Discussion about this post