தென் மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகா அணைகள் நிரம்பி உள்ளன. இதனால், காவிரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால், கேரளா மற்றும் கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கேரளாவில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல், கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் இருந்து ஒரு லட்சத்து, 22 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post