ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், காஷ்மீரில் ஊழல், பயங்கரவாதம் , குடும்ப அரசியல் வளரவே 370 வது சட்டப்பிரிவு உதவியது என்றார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்களால் லடாக்கில் எந்த பலனும் ஏற்படவில்லை என்றும், 370 வது சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்தததாகவும் குற்றம்சாட்டினார். காஷ்மீரில் பயங்கரவாதத்தால், இதுவரை 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், சர்தார் வல்லபாய் பட்டேல், வாஜ்பாய் ஆகியோரின் கனவு நனைவாகி உள்ளது என்றார். காஷ்மீர் குழந்தைகளின் கனவுகள் இனிதான் நனவாகும் என்றும் மத்திய அரசின் அனைத்து நலத் திட்டங்களும், இனி காஷ்மீரை சென்றடையும் எனவும் தெரிவித்தார். நாகரீக சமுதாயத்தில் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை தரம் உயரும். காஷ்மீர் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் எனவும் கூறிய அவர், உங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post