பாண்டிச்சேரி மாநிலம் சொக்கநாதன் பேட்டை பகுதியை சேர்ந்த, கார் இடைத்தரகர் பார்த்தசாரதி, தொழில் ரீதியாக பெரம்பலூர் தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதையறிந்த விடுதி உரிமையாளர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கயிற்றில் தூக்குமாட்டி இறந்த நிலையில் பார்த்தசாரதியின் உடலை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post