கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா சதி செய்வதாக முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மத்திய பாரதிய ஜனதா அரசு எதிர்க்கட்சிகைள ஒடுக்குவதற்கு சிபிஐ, வருமானவரிதுறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்துகிறது எனத் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலின்போது அதே முறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திமோதி திட்டமிட்டுள்ளதாக் குறிப்பிட்டார். வருமான வரித்துறையை பயன்படுத்தி கூட்டணி அரசை கலைப்பதற்கு பா.ஜ.க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதாவின் எத்தகைய சூழ்ச்சியையும் நாங்கள் எதிர்கொள்வோம் எனறும் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள்தோல்வி அடைவார்கள் எனறும் குமாரசாமி தெரிவித்தார்.
Discussion about this post