தேக்கடி மற்றும் கேரளப் பகுதிகளில், பெய்து வரும் தொடர் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் தேக்கடி பகுதிகளில் 21 மி.மீட்டரும், முல்லைப் பெரியாறு பகுதியில் 41 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு 496 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post