கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ காங்கிரஸ் மூத்த தலைவர்களே காரணம் என்று முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளது, காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், கடந்த 14 மாதங்களில் கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக முழுமனதுடன் பணியாற்றி உள்ளதாகவும் கடந்த காங்கிரஸ் அரசால் செய்ய முடியாததை செய்து முடித்ததாகவும், கூறினார். அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்ட குமாரசாமி, ஒழுக்கம் என்பதே கிடையாது என்ற நிலை தனக்கு தனிப்பட்ட முறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அரசியலில் இருந்து விலக முடிவெடுத்த நிலையில், ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டதால் தொடர்வதாக கூறினார். ஆட்சி தொடர வேண்டும் என்பதை கர்நாடகத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்பவில்லை என குறிப்பிட்ட குமாரசாமி, ஆட்சி கவிழவும் அவர்கள் தான் முக்கிய காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
Discussion about this post