குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்களும், கேரளாவை சேர்ந்த ஒரு மீனவரும் ஆகாஷ் என்ற விசைப்படகில் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார்கள். இந்நிலையில், கடந்த மே மாதம் மன்சூர் என்பவரின் தவறான வழிக்காட்டுதலால், வேறொருவர் பெயரில் படகினை பதிவு செய்து லட்சத்தீவில் மீன் பிடித்து வந்தனர். மே 25 ஆம் தேதி அன்று ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் முரண்பாடுகளுடன் பதிலளித்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீனவர்களின் குடும்பத்தினர், வெளியுறவுத் துறை அமைச்சகம் தலையிட்டு வழக்கின் உண்மை நிலையறிந்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம் மனு அளித்தனர்.
Discussion about this post