அரசு செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தும் சந்தா தாரர்களை வற்புறுத்தி, வேறு நிறுவனங்களுக்கு மாற்றும் ஆப்பரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக அரசு கேபிள் டிவி கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அனைத்து அரசு செட்டாப் பாக்ஸ்களும் இனி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post