சேலத்தில் அரசு பொருட்காட்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கும் கண்காட்சியில், தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்த விளக்கப் படங்கள் கொண்ட, அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 27 அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்படுகிறது. தொடக்க விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை ஏற்கவுள்ளார். பள்ளிக் கல்வித்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் 13 கோடி மதிப்பீட்டில் 19 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 11 ஆயிரத்து 571 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க இருக்கிறார். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post